தனுஷின் 'வாத்தி' படத்தின் மாஸ் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

  • IndiaGlitz, [Friday,June 17 2022]

தனுஷ் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’ . இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார் என்பதும் சாய் குமார் உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் தமிழ், தெலுங்கு மொழிகளில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ‘வாத்தி’ படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ‘வாத்தி’ படத்தின் பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து அவர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லுரியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதிலிருந்து தனுஷ் இந்த பாடலை பாடியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இந்த படத்தில் தனுஷ் செம ஆட்டம் ஆட காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதால் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ’கொலைவெறி’ மற்றும் ’ரெளடிபேபி பாடல் போன்று ஒரு பாடல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.