'சூரரை போற்று' இந்தி ரீமேக்: மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தின் மாஸ் அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் ஜிவி பிரகாஷ் வெளியிட்டு உள்ளார் .
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் இசையில் உருவான ’சூரரைபொற்று’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் இந்தி ரீமேக் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது என்பதும் சூர்யா படத்தில் அக்ஷய்குமார் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 25ம் தேதி முதல் தொடங்கி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது ’சூரரைப்போற்று’ ஹிந்தி ரீமேக் படத்திற்காக முதல் பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். மேலும் ’சூரரைப்போற்று’ ஹிந்தி ரீமேக் படத்தில் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைப்பதற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது .
’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் வெற்றிக்கு ஜீவி பிரகாஷின் அபாரமான இசையும் ஒரு காரணமாக இருந்ததை அடுத்து இந்தி ரீமேக்கிலும் அவரது இசை கலக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Super happy to to be composing for this classic …. With new exciting songs and bgscore … @akshaykumar sir @Suriya_offl sir #sudhakongara @Abundantia_Ent @2D_ENTPVTLTD .. exciting days ahead. https://t.co/fjneVYiuVZ
— G.V.Prakash Kumar (@gvprakash) April 25, 2022
First song completed for @akshaykumar sir @Sudha_Kongara film @Suriya_offl sir @2D_ENTPVTLTD …. Eagerly Waiting to see the magic translate on screen … #SooraraiPottru Hindi … #akshaykumar @Abundantia_Ent @vikramix …. ???? great times ahead …
— G.V.Prakash Kumar (@gvprakash) April 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments