சூர்யாவின் 'வணங்கான்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

  • IndiaGlitz, [Sunday,September 11 2022]

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது என்பதும் இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘வணங்கான்’ படத்தின்அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சூர்யா தற்போது சிறுத்தை சிவாவின் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் அவர் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்புக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘வணங்கான்’ படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில், இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை தெரிவித்து உள்ளார். அதன்படி ‘வணங்கான்’ படத்தின் பாடல்கள் ரிக்கார்டிங் செய்யும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், சூர்யாவின் தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜூவும் நடித்து வருகின்றனர்.