தமிழ் நடிகரின் முன்னாள் மனைவியை காதலிக்கின்றாரா பிரபல இசையமைப்பாளர்?

  • IndiaGlitz, [Sunday,May 29 2022]

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தமிழ் நடிகரின் முன்னாள் மனைவியை காதலிப்பதாக கூறப்படும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் இசையமைப்பாளர் கோபி சுந்தர், கார்த்தி நடித்த ’தோழா’ மற்றும் ’பெங்களூர் நாட்கள்’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களுக்கும் ஏராளமான மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மனைவி பிரியாவை விவாகரத்து செய்த இசையமைப்பாளர் கோபி சுந்தர் அதன்பின்னர் பாடகி அபயா ஹிரன்மயி என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. தற்போது அவரையும் கோபி சுந்தர் பிரிந்து இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் கோபி சுந்தர் தனது சமூக வலைத்தளத்தில் அம்ருதா சுரேஷ் என்ற பாடகியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பாடகி அம்ருதா, இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.