இரண்டு வருடங்களுக்கு முன்பே வாக்கு கொடுத்தாரா அஜித்? பிரபலத்தின் டுவிட்டால் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாம் இருவரும் இணைந்து பணிபுரிவோம் என்றும் இரண்டு வருடங்களுக்கு முன்பே அஜித் கூறினார் என்று பிரபலம் ஒருவர் பதிவு செய்த பழைய டுவிட் ஒன்று தற்போது திடீரென வைரலாகி வருகிறது.
தல அஜித் நடித்துள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகும் அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களில் செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் ஜிப்ரான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த டுவிட் ஒன்றை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்த டுவிட்டில் ஜிப்ரான், ‘நடிகர் அஜித்தை நான் சந்தித்தது ஒரு ரசிகரின் சந்திப்பு போன்றது என்றும், எல்லோரும் சொல்வதை காட்டிலும் அவர் சிறப்பாக இருக்கிறார் என்றும், அவர் என்னிடம் ’நாம் சேர்ந்து பணிபுரிவோம்’ என்று சொன்னது என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது’ என்றும் கூறியுள்ளார்.
எனவே இரண்டு வருடங்களுக்கு முன்பே ஜிப்ரான் அவர்களிடம் அஜித் கொடுத்த வாக்குறுதியை தான் தற்போது அவர் நிறைவேற்றுகிறார் என்று அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
A true fanboy moment ?? with #ThalaAjith sir! He IS what everyone says and even more, ???? From all the words he said, the only one keeps ringing 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' ????
— Ghibran (@GhibranOfficial) March 31, 2019
Gratitudes ???? #sundaysweetday pic.twitter.com/vW8AXLTfRf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com