காயத்ரி ரகுராம் இழந்த பதவியை பெற்ற இசையமைப்பாளர்: அண்ணாமலை அறிவிப்பு!

பாஜகவில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் வகித்து வந்த பதவி தற்போது பிரபல இசையமைப்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் சேர்ந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பதவி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் பாஜக தலைமையை கடுமையாக விமர்சித்ததன் காரணமாக அவரை ஆறு மாத காலத்திற்கு கட்சியிலிருந்து நீக்கி அண்ணாமலை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனை அடுத்து தற்போது காயத்ரி ரகுராம் வகித்த வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சித் துறையின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலச் இசையமைப்பாளர் தினா அவர்களும் மாநில துணை தலைவர் ஆனந்த் மெய்யாச்சாமி அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் தீனா, தனுஷ் நடித்த ’திருடா திருடி’ அஜித் நடித்த ’தீனா’ விஜய் நடித்த ’திருப்பாச்’சி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.