close
Choose your channels

பிரபல இசையமைப்பாளர் கார் விபத்தில் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

Monday, September 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவிலிருந்து பிரபல இசையமைப்பாளர் தனது காரில் நண்பர்களுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அந்த கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இசையமைப்பாளர் மறைந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தஷி என்ற சிவகுமார். இவர் ‘ஒத்த வீடு’ ’ஆடவர்’ ’சாதனை பயணம்’ போன்ற தமிழ் படங்களுக்கும் ஏராளமான மலையாள படங்களுக்கும் இசை அமைத்து உள்ளார்

இந்த நிலையில் இசையமைப்பாளர் தஷின் தனது நண்பர்களுடன் நேற்று கேரளாவில் இருந்து சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் தஷி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவரது நண்பர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

50 வயதான மறைந்த இசையமைப்பாளர் தஷி, ‘தந்தாரா’ என்ற மலையாள படத்திற்கு இசையமைப்பதற்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற கேரள மாநில விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஆயிரக்கணக்கான பக்தி ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார். மறைந்த தஷிக்கு தமிழ், மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment