close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தில் பாட்டு பாடிய பிரபல இசையமைப்பாளர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து இந்த ஆண்டே ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிவகார்த்தியன் தயாரிப்பில் ஏற்கனவே ’கனா’ மற்றும் ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வாழ்’

’அருவி’ என்ற படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார் என்பதும், இந்த படத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment