உலக மக்களோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்: பிரபல இசையமைப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது உடல்நிலை தேறி வருவதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் தேவா மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் ஆகியோர் எஸ்பிபிக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர். இசையமைப்பாளர் தேவா கூறியபோது, ‘எஸ்பிபி அவர்களே இந்த உலக மக்களோடு சேர்ந்து நாங்களும் தினமும் உங்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறோம். நீங்கள் பூரணமாக குணமடைய வேண்டும். முன்மாதிரி திரும்பவும் வர வேண்டும்' என்று வாழ்த்துகிறோம் என்று கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா கூறிய போது ’நீங்கள் நிச்சயமாக சீக்கிரம் வர வேண்டும் உங்களுக்காக நாங்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறோம். இந்த உலகமே பிரார்த்தனை செய்கிறது. உங்களை நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்' என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் உள்பட பல இசையமைப்பாளர்கள் பிரார்த்தனை செய்வதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது தேனிசை தென்றல் தேவா மற்றும் அவரது சகோதரரும் எஸ்பிபி பிரார்த்தனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Music Director Deva & Family wishing a speedy recovery of SPB sir pic.twitter.com/mmHZMMutSM
— Ramesh Bala (@rameshlaus) August 17, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments