டி.இமானுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பரிசு: வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியான நிலையில் இந்த திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி நல்ல வசூலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ’அண்ணாத்த’ படம் ரிலீசாகி 50 நாட்கள் ஆனதை அடுத்து தனது மகிழ்ச்சியை ஹூட் செயலியில் ரஜினிகாந்த் ஆடியோ மூலம் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் ’அண்ணாத்த’ படத்தின் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அனைவருக்கும் தங்க செயின்களை பரிசாக அளித்து உள்ளார்.
இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து ’அண்ணாத்த’ படத்திற்காக தங்கச்செயின் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தனக்கு மட்டுமின்றி இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அவர் தங்க செயின் பரிசளித்துள்ளார் என்றும் அவருக்கும் இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்த சிறுத்தை சிவா மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதிமாறன் அவர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததால் மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.
Such a sweet gesture from Our Superstar @rajinikanth Ayya! To honour the chief technicians of Annaatthe with a Gold chain! His special mention about every craftsmanship was so obliging! Thanks to Siva Sir and @sunpictures Kalanithi Maran Sir! A Memorable Day! Praise God! pic.twitter.com/DvGzsF5Jg2
— D.IMMAN (@immancomposer) December 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com