3வது மகளுடன் டி இமான்: சொந்த மகள்களுக்காக காத்திருப்பதாக உருக்கமான பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையமைப்பாளர் டி இமான் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில் தனக்கு மூன்றாவது மகள் கிடைத்திருப்பதாகவும் இருப்பினும் தனது சொந்த இரு மகள்களுக்காக காத்திருப்பதாகவும் உருக்கமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்த நிலையில் சமீபத்தில் அமலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம் .
இந்த நிலையில் டி இமான் தனது சமூக வலைத்தளத்தில் தனது இரண்டாவது திருமணம் குறித்து கூறியிருப்பதாவது: கடந்த ஞாயிறு அன்று மறைந்த பிரபல கலை இயக்குனர் உபால்ட் என்பவரின் மகள் அமலியை நான் திருமணம் செய்து கொண்டேன். நான் வாழ்வில் கடினமான தருணங்களில் இருந்தபோது எனக்கு ஆதரவாக இருந்த எனது தந்தைக்கு நான் எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
முழுக்க முழுக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்த இந்த திருமணம், கடந்த சில வருடங்களாக எனக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட அனைத்து சவால்களுக்கும் தீர்வாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த திருமணத்தை ஏற்பாடு செய்து அமலியை எனக்கு அறிமுகம் செய்த எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன் .
அமலியின் மகளான நேத்ரா, இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் எனது சொந்த மகள்களான வெரோனிகா மற்றும் பிளக்சிக்கா ஆகியோர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு வருத்தமாக உள்ளது. அவர்களை இந்த தருணத்தில் நான் மிஸ் செய்கிறேன். இருப்பினும் அவர்கள் என்னிடம் விரைவில் வரும் வரை பொறுமையுடன் காத்திருக்கின்றேன். நான், என் மனைவி அமலி மற்றும் எங்கள் மகள் நேத்ரா, எங்கள் உறவினர்கள் ஆகிய அனைவரும் எனது மகள்கள் வந்தால் அவர்கள் மீது அன்பு செலுத்த காத்திருக்கின்றோம்.
அமலியின் குடும்பத்தினர் அனைவரும் என்மீது காட்டிய அளப்பரிய அன்பு, ஆதரவுக்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன். இந்த தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை கூறிக் கொள்கிறேன்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com