பாஜகவில் இணைந்த பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்!
- IndiaGlitz, [Thursday,December 19 2019]
கடந்த சில மாதங்களாகவே மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜகவில் திரையுலக பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏற்கனவே கங்கை அமரன், காயத்ரி ரகுராம், பொன்னம்பலம் உள்பட பலர் பாஜகவில் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகை நமீதா, ராதாரவி உள்பட ஒரு சிலர் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று பாஜகவில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் இணைந்தார். அவர் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு, பாஜகவின் உறுப்பினர் அட்டையை பொன் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த இணைப்பின்போது இசையமைப்பாளர் கங்கை அமரன் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பரத்வாஜ அடுத்து தேர்தல் நெருங்குவதற்குள் இன்னும் பல திரையுலக பிரபலங்கள் பாஜகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது