'பொன்னியின் செல்வன்' பார்த்த பிறகு இதையெல்லாம் நிறுத்திவிட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்
Send us your feedback to audioarticles@vaarta.com
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்த்த பிறகு ஓடிடியில் பிரமாண்டமான படங்களை பார்க்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் பேசியுள்ளார்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் வரும் 30ஆம் தேதி முதல் பாகம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தமிழகம், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலக அளவில் இந்த படத்திற்காக புரமோஷன் செய்யப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் பேசும் போது, ‘பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தபிறகு அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றில் வெளியாகும் வெளிநாட்டு பிரமாண்டமான படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.
நம்ம ஊரில் இப்படிப்பட்ட அற்புதமான கதைகள் இருக்கும்போது, நம்ம ஊரிலும் திறமையான நடிகர்கள் இருக்கும்போது எதற்காக வெளிநாட்டு படங்களை பார்க்க வேண்டும்? ‘பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர்களுக்கும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என கூறினார்
#PonniyanSelvan Promotion⭐#ARRahman : " After watching #PS1 I Stopped Watching all Foreign Series on Netflix and Prime??????"
— Saloon Kada Shanmugam (@saloon_kada) September 24, 2022
It's Unbelievable #ARR Praised The Film♥️
Sky High Hype??pic.twitter.com/rSCeKest1F
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments