எல்லோருக்கும் ஒரே உணவு.. பசியாற்றிய வள்ளல்.. விஜயகாந்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்..!

  • IndiaGlitz, [Friday,December 29 2023]

தேமுதிக தலைவர், புரட்சி கலைஞர் நடிகர் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் அவரது உடல் தற்போது சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உள்பட பல திரையுலக பிரபலங்கள் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதேபோல் பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பல திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் விஜயகாந்த்துக்கு புகழாரம் தெரிவித்து அவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

திரைத்துறையில், கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Immerse Yourself in the Melodies of Vijayakanth!

Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!

Listen Now