27 வருடத்திற்கு பின் அந்த பிரபலத்தை சந்தித்தேன்: ஜிவி பிரகாஷ் பகிர்ந்த புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷூக்கு தற்போது 34 வயது ஆகும் நிலையில் 7 வயதில் அதாவது 27 வருடங்களுக்கு முன் சந்தித்த அந்த பிரபலத்தை மீண்டும் சந்தித்தேன் என இரண்டு புகைப்படங்களை ஜிவி பிரகாஷ் குமார் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன
இலங்கை வானொலையில் பணிபுரிந்து அதன்பின் சன் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் அப்துல் ஹமீத். அவருடைய கணீர் குரலை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் தூய தமிழில் பேசி அசத்துவார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்த ’ஜென்டில்மேன்’ என்ற திரைப்படத்தில் சிறுவனாக இருந்த ஜீவி பிரகாஷ் ’சிக்கு புக்கு ரயிலே’ என்ற பாடலைப் பாடினார். அப்போது ஜிவி பிரகாஷ் பிரபலம் அடைந்த நிலையில் அவரை சந்தித்து அப்துல் ஹமித் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம், வீடியோ இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வளர்ந்து உள்ள ஜிவி பிரகாஷ், 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அப்துல் ஹமீத் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தையும் 27 வருடங்களுக்கு முன் சந்தித்த புகைப்படத்தையும் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
??@gvprakash ?? pic.twitter.com/6txr9WwCl5
— ??Vj✊??தரன்???? #GoHomeGota (@vijaytharan2) June 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments