பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திடீர் மரணம்

  • IndiaGlitz, [Wednesday,December 06 2017]

கார்த்திக் நடித்த 'அமரன்' படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமான பிரபல இசையமப்பாளர் ஆதித்யன் இன்று அமரரானார். அவருக்கு வயது 54

அமரன், நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி உள்பட பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் இன்று திடீரென காலமானார். அவரது குடும்பத்தினர்களுக்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஆதித்யன், கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சையின் பலனின்றி ஐதராபாத்தில் இன்று அவர் மரணம் அடைந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.