பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து மீண்டும் இணையும் ஓவியா-சினேகன்

  • IndiaGlitz, [Friday,October 13 2017]

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருசிலருக்கு மிகப்பெரிய புகழும், ஒருசிலருக்கு கடுமையான விமர்சனங்களும் கிடைத்தது. கடைசி வரை சினேகன், ஆரவ் இடையே கடைசி வரை கடுமையான போட்டி இருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டார்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை பெறவில்லை என்றாலும் மக்களின் சாம்பியன் என்ற பட்டத்தை பெற்றவர்கள் ஓவியா மற்றும் சினேகன் என்பது தெரிந்ததே. இவர்கள் இருவரில் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்று லட்சக்கணக்கானோர் விரும்பினர்

இந்த நிலையில் சினேகன் மற்றும் ஓவியா தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். ஆம், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை பிரபல இசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்கவுள்ளார். இந்த படம் குறித்த பிற விபரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

More News

புதுப்படங்கள் ரிலீஸ் தடை எதிரொலி: மீண்டும் ரிலீஸ் ஆகும் 'தரமணி'

கேளிக்கை வரி பிரச்சனை காரணமாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்த நிலையில் தற்போது ஏற்கனவே ரிலீஸ் ஆன விவேகம், ஸ்பைடர், கருப்பன், ஹரஹர மகாதேவி

தலைமை செயலகத்தில் டெல்லி முதல்வரின் கார் திருட்டு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புளூவேகன் கார் தலைமைச்செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த கார் திடீரென மர்ம நபர்களால் திருடுபோயுள்ளது.

மெர்சலில் 'மெர்சல்' காட்டிய ஜூனியர் வடிவேலு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் என்பது தெரிந்ததே.

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்களிடம் ஜி.வி.பிரகாஷ் வைத்த கோரிக்கை

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டு முதல் அனிதா பிரச்சனை வரை பல சமூக பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்து வருவது தெரிந்ததே.

இந்தியாவையே உலுக்கிய ஆரூஷி கொலை வழக்கு: பெற்றோர் விடுதலை

சிறுமி ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்ட அச்சிறுமியின் பெற்றோர்களான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் தம்பதியருக்கு சி.பி.ஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது