முருக பக்தி: திரைப்பட இயக்குனர் வி.சேகர் அவர்களின் ஆன்மீக பயணம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் வி.சேகர், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "தமிழர் தெய்வம் முருகன்" என்ற தலைப்பில் தனது வாழ்க்கையில் முருக பக்தியின் தாக்கத்தை பற்றி உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
சிறு வயதில் முருக பக்தி
சிறு வயதில் முருக பக்தி மிக்க குடும்பத்தில் பிறந்ததால், இயல்பாகவே முருகனை வழிபடத் தொடங்கியதாக வி.சேகர் கூறுகிறார். ஆனால், பின்னர் சென்னைக்கு சினிமா துறைக்கு வந்த பிறகு, கடவுள் மறுப்பு இயக்கங்களிலும், கம்யூனிஸ்ட் இயக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டதால், கடவுள் மறுப்பாளராக மாறினேன் என்று அவர் தெரிவிக்கிறார்.
பழனியில் நடந்த அற்புத சம்பவம்
இந்த காலகட்டத்தில்தான், பழனிக்கு ஹோட்டல் திறப்பு விழாவுக்காக செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு திடீரென தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது நடந்த அற்புத சம்பவங்கள் தன்னை மீண்டும் சிந்திக்க வைத்ததாக அவர் உணர்ச்சிபூர்வமாக விவரிக்கிறார்.
முருகன் ஏன் பழனிக்கு வந்தார்?
இந்த சம்பவத்தையடுத்து, முருகன் ஏன் பழனிக்கு வந்தார் என்ற கேள்வி தனக்குள் எழுந்ததாகவும், தான் அறிந்த பழனி முருகன் கதை ஞாபகத்திற்கு வந்ததாகவும் கூறுகிறார். மேலும், எல்லோருக்கும் தெரிந்த ஞாண பழம் கதையை தனது கண்ணோட்டத்தில் வித்தியாசமான சிந்தனையில் விளக்குகிறார். இதனைத் தொடர்ந்து, தமிழ் கடவுள் முருகனின் பெருமைகள், முருகன் யார்? மனிதனா? முருகனுக்கு பிறப்பு, இறப்பு உண்டா? போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
உலகத் தமிழரின் கடவுள் முருகன்
உலகம் முழுவதும் வழிபடப்படும் நம் தமிழ் கடவுள் முருகனின் வரலாறு, பழனி மலை உருவான கதை, பழனியில் முருகன் குடியேற காரணம் போன்ற தகவல்களையும் வி.சேகர் விளக்குகிறார்.
முருக பக்தர்களுக்கும், தமிழ் கலாச்சாரத்தை பற்றி அறிய விரும்புபவர்களுக்கும் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com