கெட்டுபோன மாமிசம் எனக்கூறிவிட்டு… காதலியை கூறுபோட்டு எரித்த சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
துருக்கியில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. அப்படி பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் சார்பில் குரல் கொடுத்து வந்த பெண்ணிய போராளி மனார் குல்டெக் எனும் 27 வயது இளம்பெண். இவர் திடீரென்று காணாமல் போனதால் கடந்த சில மாதங்களாக துருக்கி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குல்டெக்கின் காதலரே இவரை துண்டு துண்டாக வெட்டி தியில் எரித்த சம்பவம் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் துருக்கியல் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. முதலில் காணாமல் போன குல்டெக்கை கண்டுபிடிக்க அவருடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் போலீசார் விசாரித்து இருக்கின்றனர். அப்போது குல்டெக்கின் காதலரான செமன் மெடின் அவ்சியின் தம்பி மெர்ட்கன் அவ்சியின் தொலைபேசி அழைப்புகளை போலீசார் மோப்பம் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
அப்போது மெர்ட்கன் தனது சகோதரர் கடந்த ஜ5லை 21 ஆம் தேதி கெட்டுப்போன மாமிசங்களை எரித்துக் கொண்டிருந்தார். அவருடைய மதுபானக் கடையின் கீழ்த்தளத்தில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டி ஏற்கனவே பழுதாகி விட்டது. அதனால் அவர் அப்படி செய்திருக்கலாம். எனவே செமன் மெடின் அவ்சி மீது சந்தேகப்பட வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் போலீசாருக்கு இந்தத் தகவலின்மீது சந்தேகம் ஏற்பட்டதால் குல்டெக்கின் காதலர் செமன் மெடின் அவசியை விசாரித்து இருக்கின்றனர். விசாரணையில் தான் குல்டெக்கை கொன்று துண்டு துண்டாக வெட்டி எரித்தை செமன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன போலீசார் அவரை கைது செய்ததோடு இந்த விவகாரத்தில் அவரது சகோததரரையும் கைது செய்து இருக்கின்றனர்.
துருக்கியில் இப்படி பெண்கள் மீது இழைக்கப்படூம் கொடூரங்கள் அதிகரித்து வருவது குறித்து பெரும் கவலை தெரிவிக்கப் படுகிறது. கடந்த ஒரே மாதத்தில் அந்நாட்டில் 27 பெண்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். மேலும் 23 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout