வட்டி கேட்டதால், கொலை செய்த கடன்காரன்...! கோவையில் பயங்கரம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடன் கொடுத்துவிட்டு, வட்டிக்கேட்ட பெண்ணை கொலை செய்துள்ளார் கோவையைச் சேர்ந்த வீராச்சாமி என்ற கொடூரன். இச்சம்பவம் பெரும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, நரசிம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீசன். தனது தாயை கடந்த 10-ஆம் தேதி முதல் காணவில்லை என, ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் அவர் தாயார் சின்னத்தங்கம் என்ற சுப்புலட்சுமி, அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர் என்று தெரிய வந்துள்ளது.
சுப்புலட்சமியின் மொபைல் எண்-ஐ வைத்து விசாரணை நடத்தியதில், அப்பகுதியில் உள்ள வீராச்சாமியின் வீட்டிற்கு இறுதியாகச் சென்றதாக தெரியவந்தது. அவரின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், வீராச்சாமி அங்கு இல்லை. இந்நிகழ்வு காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அவர் மொபைல் எண்ணின் சிக்னலை டிராக் செய்து பார்த்த போது, அவர் கரூரில் இருப்பதை கண்டறிந்தனர் . இதையடுத்து கரூர்'சென்ற போலீசார் , வீராச்சாமியை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். அவனிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுப்புலட்சமியிடம் 50 ஆயிரம் கடன் பெற்றுள்ள வீராச்சாமி, கடந்த 8-ஆம் தேதி வட்டி தருவதாக கூறி செல்போனில் வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பி சென்ற சுப்புலட்சுமிக்கு, நோய் தீர்க்கும் மாத்திரை என, தூக்க மாத்திரையை கொடுத்துள்ளார். இதன் பின் மயக்கமடைந்த பெண்ணை, காரில் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி அருகில் கொண்டு சென்றுள்ளார். அங்குள்ள பிஏபி கால்வாய் அருகில் காரில் நிறுத்தி, சுப்புலட்சுமியை கழுத்தை நெரித்தும், கம்பியால் தாக்கியும் அடித்துள்ளார். அவர் மரணமடைந்துவிட்டதாக எண்ணி, கால்வாயில் உடலை வீசிவிட்டு கரூருக்கு தப்பியுள்ளான். இதன் பின் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுப்புலட்சுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்க அவர், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்க முடியாத நிலையில், வீராச்சாமி சதியில் கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout