ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை: முரசொலி விளக்கம்

  • IndiaGlitz, [Sunday,October 28 2018]

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இந்த கட்டுரையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் ரஜினிகாந்த் மீது அதிருப்தியில் இருப்பது போன்று இருந்தது. நக்கலுடனும் கிண்டலாகவும் எழுதப்பட்டிருந்த இந்த கட்டுரையை வைத்து ஒருநாள் முழுவதும் செய்தி தொலைக்காட்சிகள் விவாதம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்றைய முரசொலியில் இந்த கட்டுரை குறித்து முரசொலி நிர்வாகம் ஒரு விளக்கம் அளித்துள்ளது, அதில் 'சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகையை செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் மறைவுக்கு பின் முரசொலியின் சர்க்குலேஷன் குறைந்ததாகவும், ரஜினியின் கட்டுரை வெளியான அன்று அதன் விற்பனை பலமடங்கு அதிகரித்ததாகவும் தொலைக்காட்சி விவாதத்தின்போது அரசியல் விமர்சகர் ஒருவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அன்று ஒரு நாள் ஷில்பா விஜய்சேதூபதியுடன் தியாகராஜன் குமாரராஜா

தமிழ் சினிமாவில் 25 படங்கள் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய்சேதுபதி பெரும்பாலான படங்களில் வித்தியாசமான வேடங்கள் ஏற்று தனது அபார திறமையை நிரூபித்து வருகிறார்.

ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி! சிக்குகிறாரா முன்னணி நடிகர்?

தெலுங்கு திரையுலகிலும் தமிழ் திரையுலகிலும் உள்ள பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, மீடூ விவகாரத்திற்கு பின்னர் அதிக தைரியத்துடன் தனது குற்றச்சாட்டை தொடர்ந்து வருகிறார்.

நானும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்: யாஷிகாவின் 'மீடூ' குற்றச்சாட்டு

கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி இசைத்துறை உள்பட பல துறைகளில் மீடூ பாலியல் குற்றச்சாட்டு எழுந்து வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை ஸ்ருதி புகார் எதிரொலி: அர்ஜூன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

மீடூ குற்றச்சாட்டு குறித்த விவகாரம் கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் சமீபத்தில் பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன்

கள்ளக்காதலுக்கு ஆர்.கே.நகர் டெக்னிக்கை பயன்படுத்திய இளம்பெண்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.20 டோக்கன் கொடுத்து அந்த டோக்கனை தேர்தல் முடிந்த பின்னர் கொடுத்து பணம் பெற்று கொள்ளலாம்