சில இயக்குனர்கள் பழைய இலக்கணங்களை உடைத்து சினிமாவில் புதிய பாதைகள் வகுப்பார்கள். சிலரோ நாம் பழகிப்போன இலக்கணத்துக்குள்ளேயே வேறொரு பரிமாணம் காட்டுவார்கள். இயக்குனர் அதிரூபன் சுப்ரமணியபுரம் ஸ்வாதி கதாபாத்திரத்துக்கு ஒரு ட்விஸ்ட் வைத்து கதை பண்ணியத்தில் சபாஷ் வாங்கினாலும் அரத பழசான திரைக்கதை அமைப்பில் கோட்டை விட்டு படுத்தி எடுக்கிறார்.
படம் ஆரம்பிக்கும்போது பாதி மொட்டை தலையுடன் அறிமுகமாகும் சாந்தனு துப்பாக்கி முனையில் மணப்பெண் கதாநாயகியை கடத்தி காரில் பறக்கும் பொது நாம் நிமிர்ந்து உட்காரவே செய்கிறோம். ஹீரோயின் அண்ணன் ரவுடிகளுடன் துரத்த காரில் மயங்கி கிடக்கும் ஸ்ருஷ்டி டாங்கே வை பார்த்தபடி பிளாஷ் பாக் செல்கிறார் ஹீரோ. குழந்தைப்பருவத்திலேயே இருவரும் நட்புடன் இருப்பதும் பின் சாந்தனு ஹீரோயின் அண்ணன் கலப்பு மணம் செய்த்ததற்காக தன் மூத்த தங்கையையும் காதலனையும் கொலை செய்யவதை நேரில் பார்த்து தான் போலீஸ் கார அப்பாவிடம் போட்டு கொடுக்கிறார். திருமண மேடையிலேயே அந்த கொலை கார அண்ணனை கைது செய்ததும் வேறு ஊருக்கு தூக்கி அடிக்க படுகிறார். வளர்ந்த சாந்தனு வேலைக்காக அமெரிக்கா போக வேண்டிய தருவாயில் மீண்டும் சொந்த ஊருக்கே மாற்றலாகி திரும்புகிறார். அங்கே ஸ்ருஷ்டியை பார்த்து மீண்டும் காதலில் விழ இருவரையும் பிரிக்க அதே பழைய அண்ணன் புறப்பட பிளாஷ் பாக் முடிகிறது. கண் விழிக்கும் ஸ்ருஷ்டி சந்தனுவை பார்த்து அலற இடைவேளை ட்விஸ்டில்தான் தெரிகிறது சாந்தனு அவரை விருப்பமில்லாமல் கடத்தி வந்திருக்கிறார் என்று. அதன் பிறகு கதை அங்கே இங்கே நகர்ந்து பின் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பதுடன் கிளைமாஸ் நோக்கி நகர்ந்து சோகத்தில் முடிகிறது.
சமீபத்தில் வந்த கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் அமைதியாக அழுத்தமாக நடித்த சாந்தனு இதிலும் கொடுத்த வேலையை கச்சிதமாகவே செய்திருக்கிறார். காதலில் உருகுவதிலாகட்டும், பின்னர் கடைசியில் ஏமாற்றத்தில் சரிவதிலாகட்டும் மிக நல்ல முன்னேற்றம். படத்தில் கவனத்தை முழுவதுமாக ஏற்பவர் என்னமோ ஸ்ருஷ்டி டாங்கே தான். ஆரம்பத்தில் சினிமாதனமிக்க லூசு பெண் போல தெரிந்தாலும் கடைசியில் சுய ரூபம் காட்டும்போது அசத்திவிடுகிறார். சினிமா ஹீரோவாக வந்து ஸ்ருஷ்டியின் வருங்கால கணவனாக வரும் ஸ்கந்த அசோக் நிறைவான நடிப்பை தருகிறார். அதே போல ஹீரோயின் அண்ணனாக வந்து மிரட்டும் ரவி பிரகாஷும் ஓகே. அப்புக்குட்டி, தம்பி ராமையா மற்றும் ஸ்வாமிநாதன் இருந்தும் நகைச்சுவைக்குதான் ஏகப்பட்ட பஞ்சம்.
ஜி வி பிரகாஷின் பாடல்கள் காதுக்கு இதமாகவும் பின்னணி இசை படத்துக்கு ஏற்றவாறும் பொருந்தியிருக்கிறது. ராசுமத்தியின் காமிராவும் விவேக் ஹர்ஷனின் எடிட்டிங்கும் பரவாயில்லை ரகம். இயக்குனர் அதிரூபன் ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு வாய்த்த ட்விஸ்ட் மட்டுமே போதும் என்று நினைத்து விட்டு மற்ற எல்லா விஷயத்திலும் கோட்டை விட்டுருக்கிறார். நாயகன் நாயகியின் காதலே அழுத்தமாக சொல்லப்படாத போது அதில் வரும் குழப்பங்களும் வலிகளும் நமக்கு என்ன என்பதை போலவே ஒரு ஓட்டுதல் இல்லாமல் செல்கிறது. காதலியின் துரோகம் கூட தெரியாமல் அவளை பிரியும் சாந்தனு போதை மருந்து அருந்தும் அளவுக்கு போவதெல்லாம் அபத்தத்தின் உச்சம். படத்தில் வரும் அழுத்தமான விஷயமே ஸ்ருஷ்டியின் இரட்டை முகம் அதற்கு பிறகு நடக்கும் உணர்ச்சிகரமான காட்சிகள் தான் ஆனால் அதை சென்று அடைவதற்குள் ரம்பமான காட்சிகளின் அணிவகுப்பை பார்த்து சலித்து போன ரசிகனுக்கு பாதிப்பு பாதியாகத்தான் இருப்பது சோகமான விஷயம்தான்.
ஸ்ருஷ்டி டாங்கேயின் நடிப்புக்காகவும் உணர்ச்சிமிகு இறுதி காட்சிகளுக்காகவும் தைரியம் இருப்பவர்கள் பார்க்கலாம்.
Comments