ஹீரோ ஆகும் இன்னொரு காமெடி நடிகர்: டைட்டில் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பது புதிதில்லை. நாகேஷ், கவுண்டமணியில் இருந்து விவேக், சந்தானம் வரை பல காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் இன்னொரு காமெடி நடிகர் ஹீரோவாகிறார். அவர்தான் நடிகர் முனீஸ்காந்த். முண்டாசுபட்டி உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் கலக்கிய முனிஷ்காந்த் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்றுள்ளார். இவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘ மிடில் கிளாஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கிஷோர் எம் ராமலிங்கம் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தை பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த, தற்போது சிவகார்த்திகேயனின் ’அயலான்’ உள்பட ஒருசில திரைப்படங்களை தயாரித்து கொண்டு இருக்கும் கேஜேஆர் டுடியோஸ் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் தயாநிதி இசையில் ஆர்வி ஒளிப்பதிவில் ஆனந்த் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் நகைச்சுவை அம்சமுள்ள ஒரு குடும்பத் திரைப்படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
“Middle class la KASHTAM onnaa rendaa?” ??
— KJR Studios (@kjr_studios) November 5, 2020
“Middle class la SANTHOSHAM onnaa rendaa!!” ??
Very happy to announce our next production in association with @koustubhent titled #MiddleClass ????????????
Dir @KishoreMr15
Starring #Muniskanth
Music by @DhayaSandy pic.twitter.com/tZg1mhQ9yc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com