'முந்தானை முடிச்சு' கிளாமர் டீச்சர் தீபா பாட்டியாகி விட்டாரா? பேரக்குழந்தையுடன்  க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,April 20 2023]

கே. பாக்யராஜ் இயக்கி நடித்த ’முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் கிளாமர் டீச்சராக நடிப்பில் கலக்கிய நடிகை தீபாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகை தீபா கடந்த 1975 ஆம் ஆண்டு கமலஹாசன் நடித்த ’அந்தரங்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் கமல்ஹாசன் உடன் ’உல்லாச பறவைகள்’ ரஜினியின் ’ஜானி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்

இருப்பினும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ’முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பட்டு டீச்சர் கேரக்டர் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் அவர் கிளாமர் கேரக்டரில் கலக்கினார் என்பதும் குறிப்பாக முதியோர் கல்வி நிலையத்தில் அவர் முதியோர்களின் கையைப் பிடித்துக் கொண்டு எழுத சொல்லி தரும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தீபா கடந்த 1982 ஆம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் ரிஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நிர்மல் என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தீபாவின் க்யூட் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகிறது.

More News

டெல்லி சாலையோர கடையில் குல்பி சாப்பிட்ட 'பொன்னியின் செல்வன்' டீம்.. க்யூட் புகைப்படங்கள்..!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

கணவர் கண் முன்னே இறந்த மனைவி.. சர்க்கஸ் சாகசத்தின் போது ஏற்பட்ட விபரீதம்..!

சீனாவில் கணவன் மனைவி இருவரும் சர்க்கஸ் சாகசம் செய்து கொண்டிருந்த நிலையில் பெண் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ட்விட்டரின்  ப்ளூடிக்   இழப்பு.. முதல்முறையாக விளக்கமளித்த ஜெயம் ரவி-த்ரிஷா..!

 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா தங்கள் கேரக்டர்களின் பெயரை ட்விட்டர் பக்கத்தின் பெயராக மாற்றிய நிலையில் அவர்கள் இருவருடைய ப்ளூடிக் நீக்கப்பட்டது

நான் சோப்பு தான் விற்கிறேன், என்னை விற்கலைடா நாயி.. நடிகை ஐஸ்வர்யாவின் கோபம் எதனால்?

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா ஆவேசமாக 'நான் சோப்பு தான் விற்கிறேன், என்னை விற்கவில்லை என கோபத்துடன் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிதி ஷங்கரின் அடுத்த பட ஹீரோ இவரா?  சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த 'விருமன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்த தற்போது அவர்