'முண்டாசுப்பட்டி' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்.. காளி வெங்கட் இரங்கல்..!

  • IndiaGlitz, [Saturday,December 09 2023]

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் 'முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மதுரை மோகன் காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவர் மதுரை மோகன். இருப்பினும் முண்டாசுப்பட்டி, வீரன் ஆகிய படங்களில் மட்டுமே அவருக்கு சிறப்பான கேரக்டர் கிடைத்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முண்டாசுப்பட்டி மதுரை மோகன் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மதுரை மோகன் மறைவு குறித்து காமெடி மற்று குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் கூறியிருப்பதாவது

ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின் மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும் “வீரன்” பட இயக்குனர் சரவண் அவர்களுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்” என பதிவு செய்துள்ளார்.