கடந்த கால வலிகளை உணர்வுபூர்வமாக பகிர்ந்த முந்தைய நடிகை மும்தாஜ்.
- IndiaGlitz, [Friday,March 15 2024]
மோனிஷா என் மோனலிசா என்னும் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி,பிறகு சில கவர்ச்சி வேடங்களில் நடித்து,தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து புகழ்பெற்ற முந்தைய நடிகை மும்தாஜ் அவர்கள்,அவள் Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,
நான் ஒரு முஸ்லிம் சமூகத்தில் பிறந்து வளர்ந்து இருக்கிறேன்.ஆனாலும் எனக்கு என்னுடைய வேதங்களை பற்றி பெரிதாக தெரியவில்லை.குரானில் இதை செய்ய வேண்டும் இதை செய்ய கூடாது என பல வழிமுறைகளை கடைப்பிடிக்கக் கூறப்பட்டுள்ளது. பர்தா அணிவது மரபுவழி நம்பிக்கை என நினைத்து கொண்டிருந்தேன்.
எனக்கான சொந்த வேதங்களை புரிந்து கொள்ள நான் எந்த முன் முயற்சியும் எடுக்கவில்லை.மிகவும் பொறுமையாகத்தான் அந்த புரிதல் கிடைத்தது.உலக வேதங்களை புரிந்து கொண்ட பிறகு தான் எனக்கான மாற்றங்கள் நிகழ்ந்தது. பல விஷயங்களில் இருந்து அல்லாஹ் என்னை வெளியே இழுத்தார். மேலும் என்கிட்ட எல்லாமே இருந்தாலும் எனக்கு தேவையான நிம்மதி இல்லை.
இதெல்லாம் வேண்டாம் இதை எல்லாம் நான் செய்ய மாட்டேன் என கூறும் அளவிற்கு புரிதல் மற்றும் மாற்றம் ஏற்பட நிறைய கால அவகாசம் தேவைப்பட்டது.மேலும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்ல ஆசைப்படுகிறேன்.உண்மையாகவே எனக்கு ஒரு கட்டத்தில் நிம்மதியே இல்லாமல் போனது.நான் எப்போதும் அல்லாஹ்விடம் வேண்டி கொள்வேன்.
எனவே கொஞ்சம் கொஞ்சமாக அல்லாஹ் என்னை மாற்றினார்.ஒரு நாள் தனியாக வீட்டில் இருக்கும்போது என் தாவணியை நானே சரி செய்கிறேன்.சினிமாவில் நீச்சல் உடை அணிந்து நடித்த எனக்கு இந்த மாதிரியான மாற்றம் வர அல்லாஹ்வுடைய ஆசிர்வாதமே காரணம் என நினைக்கிறேன்.எனக்கு 27 வயது இருக்கும்போது மனக் கோளாறு மற்றும் வாதநோய் ஏற்பட்டு விட்டது.நிறைய நாள் அந்த வலியை அனுபவித்தேன். எனக்கென்று வரும் வாழ்க்கைத்துணை என்னிடம் சில எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருக்கும். அதை என்னால் பூர்த்தி செய்ய முடியும் என்று தோணவில்லை.
மேலும்,நான் விவேக் சாருடன் நிறைய படம் நடித்திருக்கிறேன்.எனக்கு விவேக் சார் மிகவும் பிடிக்கும்.படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் உற்சாகமாக இருப்பார்.அவர்கள் இருக்கும் இடத்தில் எல்லோரையும் மகிழ்ச்சியாக பார்த்து கொள்வார்.அவர் இறந்தது அதிர்ச்சியாகவே இருந்தாலும் எல்லோருமே ஒரு நாள் போகத்தான் போகிறோம் .அவங்களோட டைம்ல அவங்க போயிருக்காங்க .
என்னோட டைம்ல நான் போக போறேன்.இரண்டு மாதத்திற்கு முன்பு எனது பாட்டி காலமானார்.எனவே அவர்களுடைய டைம்ல அவங்க போயிட்டாங்க .இங்க எல்லோருமே ஒரு பயணிகள் போல தான்.முடிந்த வரை பயணித்து விட்டு போக போகிறோம் .இந்த உண்மையை நான் முழுமையாக நம்புகிறேன்.
கடவுளின் கருணையால் எனது அண்ணன் என்னை மிகவும் பாதுகாப்பாக பார்த்து கொண்டார்.மேலும் எனக்கு கிடைத்த ரசிகர்களும் என்னை இதுவரை புண்படுத்தவில்லை.இதற்கு மேலும் என்னை பின்னாடி பேசுபவர்கள் நான் இது போன்ற உடையில் இருந்தாலும் பேசத்தான் செய்வார்கள்.என்னை பற்றி என்ன பேசினாலும் எழுதினாலும் எனக்கு கவலை இல்லை.எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.எல்லா அம்மாக்களும் இங்கு அழகு தான்.மேலும் நான் காதலித்து இருக்கிறேன்.ஆனால் அது நடக்கவில்லை.
சக நடிகர்கள் எப்போதும் என்னை ஒரு போரிங்கான நபர் என்றே கூறுவர் .மேலும் நான் என் பழைய வாழ்க்கையில் ஏதாவது மாற்ற வேண்டும் என்றால் கண்டிப்பாக சினிமாவிற்கு வந்து இருக்க மாட்டேன் என பல வலிகளை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.மேலும மும்தாஜ் பற்றிய பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.