பிக்பாஸ் வீட்டில் வெங்காயத்தால் ஏற்பட்ட பிரச்சனை

  • IndiaGlitz, [Thursday,June 21 2018]

கேரட் பொறியலில் வெங்காயம் போடவில்லை என்ற சின்ன பிரச்சனையால் பிக்பாஸ் வீடே நேற்று ரணகளமானது

சமையல் குழுவில் இருந்த பாலாஜியின் மனைவி நித்யா நேற்று கேரட் பொறியல் செய்தார். அந்த பொறியலுடன் சேர்க்க வெங்காயம் வெட்டி தந்த மகத், அந்த பொறியலில் வெங்காயத்தை போடுமாறு கூறினார். ஆனால் வெங்காயம் போட்டால் பொறியல் கெட்டுவிடும் என்று கூறி வெங்காயத்தை போட நித்யா மறுத்துவிட்டார்.

பாலாஜி, மும்தாஜ், மகத், யாஷிகா, ஐஸ்வர்யா உள்பட பலர் வெங்காயம் போட சொல்லி வற்புறுத்திய போதிலும் பிடிவாதமாக வெங்காயத்தை போட முடியாது என்று நித்யா கூறிவிட்டதால் பிரச்சனை வெடித்தது. நேற்றைய ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியில் வெங்காயம் பஞ்சாயத்து மட்டும் சுமார் அரை மணி நேரம் நடந்ததால் பார்வையாளர்கள் வெறுப்படைந்தனர்.

கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தியது போல் இந்த வீட்டில் உள்ளவர்களில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்று கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது என்பது நேற்றைய வெங்காய சண்டையில் இருந்து தெரிய வந்துள்ளது. மும்தாஜ் சில சமயம் வில்லி போலவும் சிலசமயம் மெச்சூரிட்டி கொண்டவர் போலவும் நடந்து கொள்வதால் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. போக போகத்தான் மும்தாஜ் இன்னொரு காயத்ரியா? என்பது தெரியவரும்.

More News

இணையத்தில் லீக் ஆனது 'தளபதி 62' பட டைட்டில்?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு சன் டிவியில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் ஆர்வக்கோளாறில் 'வேற லெவல்' என்பதுதான்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? ராகுல் சந்திப்புக்கு பின் கமல் பேட்டி

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

விஜய்யை திடீரென சந்தித்த சிவகார்த்திகேயன்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நேற்று நடைபெற்றது. அதேபோல் நேற்றுடன் சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா'

சாக்கடையை பற்றி பேச வேண்டாம்: பாலாஜி குறிப்பிட்டது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் போட்டியாளர்களாக அறிவிக்கப்படதில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை வரப்போகிறது என்பதை பார்வையாளர்கள் ஊகித்துவிட்டனர்.

கமல்-ராகுல்காந்தி சந்திப்பு: அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்

நடிகர் கமல்ஹாசன் தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு செல்வதற்காக இன்று டெல்லி சென்றிருந்தார் என்பது தெரிந்ததே. அவருடைய பயண திட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மரியாதை நிமித்தமாக