மும்தாஜை அழவைத்த ஷாரிக்: பிக்பாஸ் திரைக்கதையில் திடீர் டுவிஸ்ட்

  • IndiaGlitz, [Wednesday,July 25 2018]

பிக்பாஸ் முதல் பாகம் போல் இரண்டாம் பாகத்தையும் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல பிக்பாஸ் ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் பல்வேறு முயற்சி செய்தும் 37 நாட்களாக எந்தவித பலன் கிடைக்கவில்லை. எனவே தற்போது இந்த திரைக்கதையில் பிக்பாஸ் திடீர் டுவிஸ்ட் வைத்துள்ளனர். அம்மா-மகன் போல் ஒற்றுமையாக இருக்கும் மும்தாஜ்-ஷாரிக் இடையே இன்று மோதல் ஏற்படுவதுதான் டுவிஸ்ட்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஷாரிக்கிடம் மட்டுமே மும்தாஜ் அதீத அன்பு வைத்திருந்தார் என்பது தெரிந்ததே. அவரை தன்னுடைய குடும்பத்தின் ஒருவராக பார்ப்பதாக பலமுறை கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்றைய மொக்கை டாஸ்க்கில் நடுவராக அதைவிட மொக்கையாக செயல்பட்ட ஷாரிக், மும்தாஜ் அணிக்கு பாதகமாக இரண்டு தீர்ப்புகளை சொன்னார். இதனால் கடுப்பான மும்தாஜ், இன்று ஷாரிக்குடன் மோதுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மும்தாஜ் வாயில் பிளாஸ்திரி ஒட்டுவேன் என்று ஷாரிக் கூற, அதற்கு மும்தாஜ் எச்சரிப்பது போன்று சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் உள்ளது. ஆனால் புரமோவில் இருக்கும் சுவாரஸ்யம், நிகழ்ச்சியில் இருக்காது என்பதை பலமுறை பார்வையாளர்கள் ஏமாந்துள்ளதால் இந்த திரைக்கதையை யாரும் நம்ப தயாராக இல்லை என்பது இந்த வீடியோவுக்கு பதிவாகி வரும் கமெண்ட்டுகளில் இருந்து தெரியவருகிறது
 

More News

ரஜினியை விளம்பரத்திற்காக பயன்படுத்த வேண்டாம்: சென்னை ஐகோர்ட் கண்டனம்

சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயர்களை பயன்படுத்தி விளம்பரம் தேட வேண்டாம் என்று வழக்கு தொடுத்த ஒருவருக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1983ல் இருந்தே பாலியல் தொல்லை உள்ளது: பழம்பெரும் நடிகை அதிர்ச்சி பேட்டி

கடந்த 1983ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவுலகில் பாலியல் பிரச்சனை இருப்பதாகவும், இல்லை என்று யாரும் கூறமுடியாது என்றும் கூறியுள்ளார்.

'கோலமாவு கோகிலா' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்தடுத்த நாட்களில் தனுஷ்-சிவகார்த்திகேயன் படங்களின் ரிலீஸ்

தனுஷ் நடித்த '3' படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயன், இன்று தனுஷூக்கு இணையாக முன்னணி நாயகனாக உயர்ந்துள்ளார்.

மோகன்லாலுக்கு எதிராக வழக்கா? பிரகாஷ்ராஜ் விளக்கம்

மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால், சமீபத்தில் நடிகை ஒருவரை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்து கொள்ள சம்மதித்தார்.