அடுத்த வார செமி பைனலில் நேருக்கு நேராக மோதும் மும்தாஜ்-ரித்விகா

  • IndiaGlitz, [Friday,September 07 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கில் ரித்விகா தவிர அனைவரும் வெற்றிகரமாக செயல்பட்டதால் நேரடி நாமினேஷனில் இருந்து தப்பித்தனர். ரித்விகா மட்டும் தனக்கு கொடுத்த டாஸ்க்கில் வெற்றி பெறமுடியவில்லை. அவர் எவ்வளவோ முயற்சித்தும் மும்தாஜை டாஸ்க் செய்ய வைக்க முடியவில்லை. இதனால் ரித்விகா நேரடியாக நாமினேஷன் செய்யப்பட்டதால் மிகுந்த அப்செட்டில் உள்ளார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சி குறித்து முதல் சீசன் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய ஆர்த்தி தனது சமூகவலைத்தளத்தில் கூறுகையில், 'எல்லாரும் தியாக த்தலைவிகள், மும்தாஜ் மட்டும் புரட்சித் தலைவி என்று கிண்டலடித்துள்ளார்.

இந்த நிலையில் மும்தாஜின் பிடிவாதம் சக போட்டியாளர்களை அதிருப்தி மற்றும் ஆத்திரத்தை வரவழைத்துள்ளது. எனவே இந்த வாரம் அனைவருமே மும்தாஜை நாமினேட் செய்ய முடிவு செய்துள்ளனர். அப்படி ஒருவேளை நடந்தால் மும்தாஜ் மற்றும் ரித்விகா மட்டுமே எவிக்சன் பட்டியலில் இருப்பார்கள். இது எனக்கு ஒரு செமி பைனல் போல, மும்தாஜூடன் மோத தயார் என்று விஜயலட்சுமியிடம் ரித்விகா ஆவேசமாக கூறினார்.

ஐஸ்வர்யாவை அடுத்து பார்வையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கும் அடுத்த நபர் மும்தாஜ் தான் என்பதால் மும்தாஜ் மற்றும் ரித்விகா இடையே போட்டி ஏற்பட்டால் நிச்சயம் மும்தாஜ் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வாரம் ஐஸ்வர்யாவும், அடுத்த வாரம் மும்தாஜூம் வெளியேறிவிட்டால் அடுத்த இரண்டு வாரங்கள் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

மீண்டும் அரசியல் களத்தில் குதித்த பிரபல நடிகர்

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் வெற்றிடத்தை நிரப்புவதாக கூறிக்கொண்டு கோலிவுட் திரையுலகினர் பலர் அரசியல் களத்தில் குதித்து வருகின்றனர்.

ஷோபியாவின் சிம்கார்டு, பாஸ்போர்ட் முடக்கம்: தந்தை குமுறல்

கனடாவில் ஆராய்ச்சி படிப்பை படித்து வரும் சோபியா என்ற மாணவி சமீபத்தில் விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்

பிரபாஸ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்

'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பிரம்மாண்ட வெற்றி படங்களுக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் தற்போது "சாஹூ" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில்

அன்பு, அன்புன்னு இனிமேல் யார் பக்கத்திலயும் உட்கார முடியாது: நெருக்கடியில் மும்தாஜ்?

பிக்பாஸ் போட்டியாளர்களில் சீனியர், பாசமழை பொழிபவர், மெச்சூரிட்டியானவர், ஹைஜீனிக்காக உள்ளவர் என்ற பல பெருமைகளுடன் வலம் வந்து கொண்டிருந்த மும்தாஜின் வேஷம் தற்போது ஒட்டுமொத்தமாக கலைந்துவிட்டது.

சோபியா விவகாரம்: ரஜினியின் கருத்து இதுதான்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்பு விமானத்தில் 'பாசிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்ட மாணவி சோபிகாவின் விவகாரம் இந்திய அளவில் டிரெண்டில் இருந்தது