பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மும்தாஜ் குடும்பத்தினர்: தொடர்கிறது செண்டிமெண்ட்
- IndiaGlitz, [Tuesday,August 28 2018]
கடந்த சில நாட்களாக மகத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆக்ரோஷமாகவும் அருவருப்பாகவும் இருந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று மகத்தின் வெளியேற்றத்திற்கு பின்னர் முற்றிலும் செண்டிமெண்ட் வீடாக மாறிவிட்டது. நேற்று ஒவ்வொரு போட்டியாளர்களின் வீடுகளில் இருந்து கடிதமும் பரிசுகளும் வந்தன. அதனை பிரித்து பார்த்து போட்டியாளர்கள் குடும்ப நினைவால் ஆனந்தக்கண்ணீர்விட்டதால் செண்டிமெண்ட் பிழிந்து வழிந்தது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் மும்தாஜ் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது வீட்டில் உள்ள போட்டியாளர்களை பிக்பாஸ் ஃப்ரீஸ் நிலையில் இருக்க சொன்னதால் செண்டிமெண்ட் உச்சத்திற்கு சென்றது.
மும்தாஜ் தனது பெற்றோரை கட்டிப்பிடித்து சிறுபிள்ளை போல் அழுததும், மும்தாஜின் பெற்றோர்கள் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை 'மகளே' என்று கூப்பிட்டு கட்டி அணைத்ததும் பார்ப்பவர்களை கண்கலங்க செய்துள்ளது. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்தபோது நெகிழ்ச்சியான அனுபவம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#பிக்பாஸ் இல்லத்தில் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/bmgbklFHtv
— Vijay Television (@vijaytelevision) August 28, 2018