மும்தாஜ் ஆர்மியின் கூட்டம்: சிறப்பு விருந்தினர்கள் வருகை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் 1 சீசனில் ஓவியாவுக்கு மட்டுமே சமூக இணையதளத்தில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது. வேறு ஒருசிலருக்கு ஆர்மி இருந்தாலும் ஓவியா ஆர்மி போல் பிரபலம் ஆகவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்கள் அனைவருக்குமே தற்போது ஆர்மி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மும்தாஜுக்கு, மும்தாஜ் ஆர்மியினர் பாராட்டு விழா நடத்த சிறப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 22ஆம் தேதி திருவள்ளூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மும்தாஜ் கலந்து கொண்டு தனது ஆர்மியினர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி கூறவுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் போட்டியாளர்களான மமதி சாரி, ரம்யா, வைஷ்ணவி மற்றும் டான்ஸ் மாஸ்டர் கலா, ஆர்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதேபோன்று ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் டேனியலுக்கும் நடந்தது. ஆனால் மும்தாஜ் ஆர்மியினர் போன்று சரியாக விளம்பரம் செய்யாததால் அந்த நிகழ்ச்சியால் பரபரப்பு இல்லை. ஆனாஅல் மும்தாஜ் ஆர்மியினர் இந்த நிகழ்ச்சியை களைகட்ட செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout