வெளில போகட்டும்: மமதியை கார்னர் செய்த மகத்

  • IndiaGlitz, [Tuesday,June 26 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு புரமோ வீடியோவும் அந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் எடிட் செய்யப்படுவதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது. தினமும் வெளியாகும் மூன்று புரமோ வீடியோக்கள் அன்றைய நிகழ்ச்சியின் முன்னோட்டமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ஒரு முக்கிய டாஸ்க்கை மும்தாஜூம் மமதியும் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். எந்த லக்சரி டாஸ்க்காக இருந்தாலும் எனது உடல்நிலை சரியில்லை என்றால் என்னால் செய்ய முடியாது என்று மும்தாஜ் கூற, அதை மமதி ஆமோதிக்கின்றார். சினிமாவில் மட்டும் இயக்குனர் சொன்னதை செய்யும் இவர்கள் இங்கு வந்தால் மட்டும் எதுவும் செய்ய மறுக்கின்றார்களே என மற்ற போட்டியாளர்கள் அதிருப்தி அடைகின்றனர்.

இதில் மகத் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே கடுப்பாகி, 'இந்த மம்தி சும்மா சும்மா மும்தாஜை ஏத்தி விட்டுக்கிட்டே இருக்காங்க, இவங்க வெளியில போகட்டும்' என்று கூறுகின்றார். எனவே கூடிய விரைவில் அம்மா-சின்னம்மா கூட்டணியினர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.