என்ன தலையை சீவிடிவியா நீ? பாலாஜியின் ஆவேசம்

  • IndiaGlitz, [Wednesday,August 15 2018]

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக இரண்டு இரண்டு பேர்களாக சண்டை போட்டு வருவது தெரிந்ததே. மகத்-டேனியல், மகத்-ஐஸ்வர்யா, என ஜோடி போட்டு சண்டை போட்டு வந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பாலாஜி-மும்தாஜ் மற்றும் மகத்-ரித்விகா சண்டை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் 'அவங்ககிட்ட பேச எனக்கு என்ன பயம்? நீ என்ன தலையை சீவிடிவியா? என்று மும்தாஜ் குறித்து மகத்திடம் பாலாஜி கேட்கும் கேள்வியில் ஒரு எகத்தாளம் தெரிந்ததை பார்க்க முடிந்தது. இதற்கு மும்தாஜின் முறைப்பு அதிபயங்கரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரித்விகா, மகத்திடம் 'அதுக்குன்னு நீ என்னை அடிச்சிடிவியா? என்று கேள்வி கேட்ட தொனி, பிக்பாஸ் 1 சீசனில், சக்தியிடம் ஓவியா 'எங்க அடி பார்ப்போம்' என்ற பாணி இருந்ததையும் பார்வையாளர்கள் கவனித்து வருகின்றனர்.

எப்படியோ பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே சண்டை மூட்டிவிட்டு நிகழ்ச்சியை பரபரப்பூட்ட ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் முடிவு செய்துவிட்டனர். இனி அடுத்த சண்டை யார் யாருக்கு? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.