கொரோனா தடுப்பு மையமாக மாறும் உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மிகவும் முக்கியமான ஸ்டேடியம் மும்பை வான்கடே ஸ்டேடியம் என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியாவில் பல முக்கிய கிரிக்கெட் போட்டிகள் அந்த மைதானத்தில் தான் நடைபெறும் என்றும் ஐபிஎல் உள்பட பல தொடர்களில் இறுதிப் போட்டிகள் பெரும்பாலும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சச்சின் டெண்டுல்கருக்கு சொந்த ஊர் மைதானம் என்பதும் ராசியான மைதானம் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள தனி வார்டுகள் நிரம்பிவிட்டன. இதனை அடுத்து மாற்று ஏற்பாடுகளை மகாராஷ்டிர அரசு ஆலோசனை செய்து கொண்டிருந்த நிலையில் மும்பை கிரிகெட் அசோஷியேஷன் தானாகவே முன்வந்து மும்பை வான்கடே ஸ்டேடியத்தை கொரோனா தனி வார்டாக மாற்றுவதற்கு அனுமதி அளித்துள்ளது
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த மைதானத்தில் கொரோனா நோயாளிகளுக்காக தனி வார்டுகள் அமைக்கப்படும் என்றும் இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன் அடைவார்கள் என்றும் தெரிகிறது. இதுவரை கிரிக்கெட் போட்டிகளின் மூலம் மக்களை மகிழ்வித்து வந்த மும்பை வான்கடே ஸ்டேடியம், முதல்முதலாக மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments