ஹீரோவின் திமிர்ப்பேச்சால் தான் படம் ஓடவில்லை: தியேட்டர் அதிபர் காட்டம்!

சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டா நடித்த ’லைகர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சால் தான் படம் ஓடவில்லை என மும்பையை சேர்ந்த தியேட்டர் அதிபர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்தேவரகொண்டா நடித்த ’லைகர்’ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதும் இரண்டாவது நாளிலேயே வசூல் பாதியாக குறைந்தது என கூறப்பட்டது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள பிரபல திரையரங்கு உரிமையாளர் மனோஜ் தேசாய் என்பவர் விஜய்தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் இந்த படம் தோல்வி அடைய காரணம் என்று கூறியுள்ளார்.

’லைகர்’ படத்தை புறக்கணியுங்கள் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியபோது விஜய் தேவரகொண்டா 'எனது படத்தை பார்க்க பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் படம் பார்க்க வில்லை என்றும் ஏற்கனவே டாப்ஸி, அமீர்கான், அக்சய்குமார் போன்றோர்கள் பேச்சால் தான் அவர்கள் பட்ட கஷ்டத்தை பார்த்தாவது திருந்துங்கள் விஜய் தேவரகொண்டா என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

3:3:3: 'கோப்ரா' படத்தின் ரன்னிங் டைம் சுவாரஸ்யம்!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா' படத்தின் ரன்னிங் டைம் தகவலில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

'விக்ரம்' படத்தின் மொத்த திரையரங்க வசூல் எத்தனை கோடி? முழு விபரம் இதோ!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கும்

கதவை மூடிக்கிட்டு இருக்குற பொண்ணு என்ன பண்றான்னு பேரண்ட்ஸ் கவனிக்கணும்: 'பகாசூரன்' டீசர்

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான 'பகாசூரன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'கோப்ரா' பட ரிலீஸ்: ரசிகர்களிடம் திடீரென மன்னிப்பு கேட்ட அஜய் ஞானமுத்து!

விக்ரம் நடித்த 'கோப்ரா' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 31 என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கிவிட்டது.

'இந்தியன் 2' படப்பிடிப்பிற்காக சென்னை வந்திறங்கிய பிரபல நடிகை: விறுவிறுப்பில் படப்பிடிப்பு!

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.