நடிகை ரியா சக்ரவர்த்தியால் மும்பை நபருக்கு நேர்ந்த தர்மசங்கடம்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,August 12 2020]

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய தற்கொலைக்கு நடிகையும், அவருடைய முன்னாள் காதலியுமான ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என்று பாலிவுட் திரையுலகில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. சுஷாந்தின் தந்தையும் ரியா சக்கரவர்த்தி மீது காவல் துறையில் புகார் அளித்து உள்ளார் என்பதும் காவல்துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் ரியா சக்கரவர்த்தியை விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுஷாந்த் தற்கொலைக்கு ரியா சக்கரவர்த்தியும் ஒரு காரணம் என்பதை அறிந்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவருடைய மொபைல் எண்ணை கண்டுபிடித்து அவருக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த சாகர் சர்வே என்பவர் மொபைல் எண்ணூம், ரியா சக்கரவர்த்தியின் மொபைல் எண்ணும் ஒரே ஒரு எண் மட்டுமே வித்தியாசமாக கொண்டது. இதனை அடுத்து ரியா சக்கரவர்த்திக்கு அனுப்பவேண்டிய கண்டனங்களை சுஷாந்த் ரசிகர்கள் சாகருக்கு அனுப்பி வருகின்றனர் சாகருக்கு தினந்தோற்றும் 150க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ், வீடியோ கால்கள் ஆகியவை வருவதாகவும், தான் ரியா இல்லை என்று அவர் பதில் அளித்தும், அதனை கண்டுகொள்ளாத ரசிகர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் வகையில் மெசேஜ்களை அனுப்பி கொண்டிருப்பதாகவும் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மொபைல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாகவும் சாகர் கூறியுள்ளார்.

தொடர்ந்து மூன்று நாட்களாக தனக்கு இவ்வாறான மெசேஜ்கள் வந்து கொண்டிருப்பதாக சாகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது