ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இந்த தமிழ் நடிகைக்கும் தொடர்பா? சம்மன் அனுப்பிய போலீஸ்!

  • IndiaGlitz, [Tuesday,July 27 2021]

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை இன்று மேலும் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் மீண்டும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ராஜ்குந்த்ரா ஆபாச பட விவகாரம் குறித்து விசாரணை செய்துவரும் போலீசார் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்குந்த்ராவின் ஆபாச படத்தில் கவர்ச்சி நடிகைகள் சிலரும், பிரபல நடிகைகளும் நடித்து உள்ளார்கள் என்றும் அவர்களிடமும் விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

அந்த வகையில் தமிழில் ஜீவன் நடித்த ‘யுனிவர்சிட்டி’ என்ற திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய நடிகை ஷெர்லின் சோப்ராவை விசாரணை செய்ய காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து நேரில் ஆஜராவதை தவிர்க்கவும் கைது செய்யப்படாமல் தப்பிக்கவும் முன் ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் நடிகை ஷெர்லின் சோப்ரா மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜ்குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் ஷெர்லின் சோப்ரா மட்டுமின்றி மேலும் சில பிரபல நடிகைகளையும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

இது வெறும் பேப்பர்தான்: கத்தை கத்தையாய் கையில் வைத்திருந்த பணம் குறித்து ஓவியா!

கத்தை கத்தையாக கையில் 500 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு 'இது வெறும் பேப்பர்தான் இதை உங்கள் தேவைக்காக கொடுக்கிறீர்கள்' என்று நடிகை ஓவியா பதிவு செய்திருக்கும் புகைப்படத்தால்

ஜூனியர் மீராபாய் வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த சீனியர் மீராபாய்!

ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு அவர்கள் மட்டுமே இந்தியாவுக்கு ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத்

க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா....! டி20 போட்டி தள்ளிவைப்பு....!

பிரபல கிரிக்கெட் வீரரான க்ருணால் பாண்ட்யாவுக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை?

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பலர் தமிழிலும் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்

நதியாவின் ஃபிட்னெஸ்-க்கு இதுதான் காரணமா? வைரல் வீடியோ

கடந்த 1985ஆம் ஆண்டு 'பூவே பூச்சூடவா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன்பிறகு நடிகை நதியா, ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சிவகுமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்