பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு NO சொன்ன இளம்பெண்… காவல்துறை கொடுத்த சர்பிரைஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாட்டிலேயே மிகவும் அதிகமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் தினம்தோறும் பாதிப்பு எண்ணிக்கையில் மும்பை மாநகரம் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது. இப்படி இருக்கும்போது இளம் பருவத்தினர் பலரும் கொரோனா விதிமுறைகளை மதிக்காமல் அவ்வபோது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பார்டி பண்ணுவதில் கவனம் செலுத்தி வருவதும் வாடிக்கையாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில் மும்பை நகரில் வசித்துவரும் இளம்பெண் சமிதா பாட்டீல். இவரது பிறந்தநாளை ஒட்டி அவரது நண்பர்கள் பலரும் பார்டி பண்ணலாம் என அழைப்பு விடுத்து உள்ளனர். இந்த அழைப்பு தொடர்பாக சமிதா பாட்டீல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் பரிசு என்பது இந்த கொரோனா நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது மட்டுமே. தீவிரம் அடைந்து வரும் கொரோனா நேரத்தில் நான் எனது நண்பர்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என்று தனது நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்து உரையாடி இருக்கிறார்.
இந்த உரையாடல் தொடர்பான ஸ்கீன் ஷாட்டையும் சமிதா தனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த ஸ்கீரின் ஷாட்டை மும்பை காவல் துறைக்கும் அவர் டேக் செய்து அனுப்பியுள்ளார். இப்படி சமிதா பாட்டீல் தனது பிறந்தநாளையும் பொருட்படுத்தாது கொரோனா பரவல் குறித்தும் தனது நண்பர்களின் பாதுகாப்பு குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபடத்தைப் பார்த்த மும்பை காவல் துறை சமிதாவின் முகவரியைப் பெற்று “பொறுப்புள்ள குடிமகன்” எனப் பெயர் பதித்த ஒரு கேக்கை அவருக்கு அனுப்பி வைத்து இருக்கிறது. இதனால் சமிதா குளிர்ந்து போனதாகத் தெரிவித்து உள்ளார்.
Just a small token of our appreciation for you being a responsible citizen & staying home on your special day , @samysays
— Mumbai Police (@MumbaiPolice) April 22, 2021
Your ‘safe’ celebration today will surely help the city bring in a ‘happy’ tomorrow.
We wish you a happy birthday once again!#TakingOnCorona #StayHome https://t.co/PlifSoo2Rs pic.twitter.com/pcnSjTmqNf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com