ஊரடங்கில் காதலியை பார்க்க அனுமதி கேட்ட இளைஞர்: காவல்துறையின் அதிரடி பதில்!

ஊரடங்கில் தனது காதலியை பார்க்க வெளியே செல்ல வேண்டும் என்றும் அதற்கு என்ன ஸ்டிக்கர் நான் ஒட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மும்பை போலீஸ் அளித்துள்ள பதில் தற்போது வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் மும்பையில் ஊரடங்கு உள்பட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் காரணமில்லாமல் யாரும் வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் தன்னுடைய காதலியை பார்க்க வெளியே செல்லவேண்டும் என்றும் அதற்கு என்ன ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு வெளியே செல்ல வேண்டும் என்று மும்பை போலீசாரிடம் டுவிட்டரில் கேட்டுள்ளார்.அதற்கு பதில் கூறிய மும்பை போலீசார் ’உங்களுடைய அத்தியாவசிய தேவை என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் அதே நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக உங்களது தேவை எங்களது அத்தியாவசிய வகைகளின் கீழ் வராது. அதனால் நீங்கள் இப்போதைக்கு வெளியே செல்ல முடியாது. நீங்கள் இருவரும் ஒன்றாக வாழ்நாள் முழுதும் வாழ்வதற்கு ஒரு சிறிய கால இடைவெளியை கடைபிடியுங்கள் என்று பதிவு செய்துள்ளது. மும்பை போலீசாரின் இந்த பதிவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

More News

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பிரபல நடிகை!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சொந்த அண்ணனையே கூலிப்படையை ஏவி கொலை செய்த பிரபல நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகத்திலும் வெள்ளி முதல் திங்கள் வரை முழு ஊரடங்கா?

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையிலும் வேறு சில மாநிலங்களிலும் வெள்ளி இரவு முதல் திங்கள் அதிகாலை வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கொஞ்சும் இயற்கையுடன் நடிகை சன்னிலியோன்… வைரல் புகைப்படம்!

அடல்ட்ஸ் ஒன்லி மூவிக்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். பின்னர் “ஜிம்ஸ் 2” எனும் இந்தி சினிமா மூலம்

மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர்....! தடுப்பூசி என்னாச்சு...?

தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, த

பிக்பாஸிற்கு சென்று இந்த பழக்கத்திற்கு அடிமையானேன்....!நடிகை குறித்து ஜேம்ஸ் வசந்தன் ஓபன் டாக்...!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று புகைப்பழக்கத்திற்கு அடிமையானதாக நடிகை கூறிய விஷயத்தை, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்