மும்பை மழை எனது உடற்பயிற்சியை ஆனந்தமாக்குகிறது: தமன்னா

  • IndiaGlitz, [Saturday,July 18 2020]

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் தற்போது அவர் மொட்டை மாடியில் மழையில் நனைந்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ’உடற்பயிற்சி, தெரபி மற்றும் மழை ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மும்பையில் மழை காலமே! நீங்கள் எனது உடற்பயிற்சிகளை ஆனந்தமாக மாற்றியுள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்

தமன்னாவின் இந்த புகைப்படம் மற்றும் அவர் கூறிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது என்பதும் தமன்னாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பாராட்டு கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தமன்னா தற்போது தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் மூன்று தெலுங்கு படங்களிலும் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது