மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெஷ்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபஎல் ஏலத்திற்கான பட்டியல் வெளியானபோதே இதை பலரும் கணித்து இருந்தனர். இவரின் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கே மும்பை இந்தியன்ஸ் அவரை ஏலம் எடுத்து இருக்கிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துதான் அர்ஜுனன் பயிற்சி பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு சையது முஷ்டாக் கோப்பை போட்டி தொடரில் ஹரியாணாவுக்கு எதிராக மும்பை அணிக்காக அர்ஜுன் விளையாடினார். இடது கை பழக்கம் கொண்ட அர்ஜுன் முதல் போட்டியில் 3 ஓவர்களில் 34 ரன்கள் குவித்ததோடு தனது மித வேகப்பந்து வீச்சால் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹரியாணா அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து பாண்டிச்சேரிக்கு எதிராக 2 ஆவது போட்டியில் விளையாடிய அர்ஜுன் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் போட்டிக்காக இவர் ஏலம் எடுத்து உள்ளது. இதனால் ரசிகர்கள் சச்சினை இனி அர்ஜுன் வடிவத்தில் பார்க்க முடியுமா என்றும் எதிர்ப்பார்க்கத் துவங்கி விட்டனர்.
அர்ஜுனை தவிர மும்பை இந்தியன்ஸ் ஆடம் மில்னே (ரூ.3.20 கோடி), நாதன் கோல்டர் நைல் (ரூ.5 கோடி), பியூஸ் சாவ்லா (ரூ.2.40 கோடி), ஜேம்ஸ் நீஷம் (ரூ.50 லட்சம்), யுத்விர் சாரக், மார்கோ ஜேன்சன் ஆகியோரை 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com