உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை! ரஜினிக்கு மும்பை தாதா மகன் மிரட்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் கதை மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் நிஜவாழ்க்கை சம்பந்தப்பட்டது என்று சமீபத்தில் ஒரு வதந்தி எழுந்தது. இதற்கு இயக்குனர் ரஞ்சித் மறுப்பும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது தந்தை தாதா இல்லை என்றும், தனது தந்தையின் பெயருக்கு களங்கும் விளைவிக்கும் திரைப்படத்தில் ரஜினி நடித்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது: 'என்னுடைய வளர்ப்புத் தந்தை, ஹாஜி அலிமஸ்தான் 'பாரதிய மைனாரிட்டி சுரக்ஷா மஹாசங்' என்ற கட்சியை நிறுவியவர். இயக்குநர் ரஞ்சித், உங்களை வைத்து எடுக்கிற படத்தில் என்னுடைய தந்தையை மும்பையின் கள்ளக் கடத்தல் தலைவனாகவும், நிழலுலக தாதாவாகவும் சித்தரித்துக் காட்ட உள்ளதாக பத்திரிகைகளில் படித்தேன். இது வேண்டாத வீண் வேலை. என் தந்தை மீது குற்றச் செயலுக்காக எந்த கோர்ட்டும் தண்டனை அளிக்கவில்லை. தேவையில்லாமல் என் தந்தை பெயரை நீங்கள் இழிவாக சித்தரித்து படத்தில் காட்சிப்படுத்தினால், அதன் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்" என்று எழுதியுள்ளார்.
ரஜினியின் போயஸ் கார்டன் முகவரிக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout