சமோசா ஆர்டர் செய்து 1 லட்சம் இழந்த மருத்துவர்... அதிகரிக்கும் ஆன்லைன் ஃபிஷிங்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதை அவ்வபோது செய்திகளில் பார்த்து வருகிறோம். அதுவும் பிரபல நிறுவனங்கள், கடைகளின் பெயர்களில் நடக்கும் மோசடிகள் சமீபத்தில் அதிகரித்து உள்ளன. அந்த வகையில் மருத்துவர் ஒருவர் சமோசா ஆர்டர் செய்து 1.4 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை பகுதியில் குடிமை நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் கேஇஎம் எனும் மருத்துவமனையில் 27 வயதான பெண் மருத்துவர் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து வெளியே செல்வதற்கு திட்டம் வகுத்த நிலையில் செல்லும்போது தின்பண்டமாக சமோசாக்களை வாங்குவதற்கு முயசித்து இருக்கிறார்.
இதற்காக சியோன் பகுதியில் இயங்கிவரும் பிரபல உணவகமான குருகிருபா உணவகத்தில் அவர் 25 தட்டு சமோசாக்களை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து ஆர்டருக்கு அட்வான்ஸ் பணமாக ரூ.1,500 ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால் பணம் கிடைக்கவில்லை என்று கூறிய எதிர் தரப்பினர் கூகுள் பேவில் செலுத்துமாறு அவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு லிங்குடன் 28807 என்ற எண்ணையும் இணைத்து அனுப்பி இருக்கின்றனர். இந்த லிங்கை பயன்படுத்தி மருத்துவர் பணத்தை செலுத்த முயன்றிருக்கிறார்.
ஆனால் தொடர்ந்து தோல்வி தோல்வி எனக் காட்டியவாறே அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1.4 லட்சம் பணம் காணாமல் போயிருக்கிறது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத மருத்துவர் ஒருகட்டத்தில் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து பதற்றம் அடைந்ததோடு சம்பந்தப்பட்ட பிரபல உணவகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உண்மையில் அதற்குப் பிறகுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது, இதுவரை மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தது சைபர் குற்றவாளி என்பது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் தற்போது போய்வாடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆன்லைன் மோசடிகள் பெரும்பாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள், கடைகளின் பெயர்களிலேயே நடைபெறுகின்றன என்றும் அவர்களது தொலைபேசி எண்களில் சில மாற்றங்களுடன் இதுபோன்ற மோசடி சம்பங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது மிக கவனமாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments