சமோசா ஆர்டர் செய்து 1 லட்சம் இழந்த மருத்துவர்... அதிகரிக்கும் ஆன்லைன் ஃபிஷிங்!

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதை அவ்வபோது செய்திகளில் பார்த்து வருகிறோம். அதுவும் பிரபல நிறுவனங்கள், கடைகளின் பெயர்களில் நடக்கும் மோசடிகள் சமீபத்தில் அதிகரித்து உள்ளன. அந்த வகையில் மருத்துவர் ஒருவர் சமோசா ஆர்டர் செய்து 1.4 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை பகுதியில் குடிமை நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் கேஇஎம் எனும் மருத்துவமனையில் 27 வயதான பெண் மருத்துவர் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து வெளியே செல்வதற்கு திட்டம் வகுத்த நிலையில் செல்லும்போது தின்பண்டமாக சமோசாக்களை வாங்குவதற்கு முயசித்து இருக்கிறார்.

இதற்காக சியோன் பகுதியில் இயங்கிவரும் பிரபல உணவகமான குருகிருபா உணவகத்தில் அவர் 25 தட்டு சமோசாக்களை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து ஆர்டருக்கு அட்வான்ஸ் பணமாக ரூ.1,500 ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால் பணம் கிடைக்கவில்லை என்று கூறிய எதிர் தரப்பினர் கூகுள் பேவில் செலுத்துமாறு அவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு லிங்குடன் 28807 என்ற எண்ணையும் இணைத்து அனுப்பி இருக்கின்றனர். இந்த லிங்கை பயன்படுத்தி மருத்துவர் பணத்தை செலுத்த முயன்றிருக்கிறார்.

ஆனால் தொடர்ந்து தோல்வி தோல்வி எனக் காட்டியவாறே அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1.4 லட்சம் பணம் காணாமல் போயிருக்கிறது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத மருத்துவர் ஒருகட்டத்தில் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து பதற்றம் அடைந்ததோடு சம்பந்தப்பட்ட பிரபல உணவகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உண்மையில் அதற்குப் பிறகுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது, இதுவரை மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தது சைபர் குற்றவாளி என்பது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் தற்போது போய்வாடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆன்லைன் மோசடிகள் பெரும்பாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள், கடைகளின் பெயர்களிலேயே நடைபெறுகின்றன என்றும் அவர்களது தொலைபேசி எண்களில் சில மாற்றங்களுடன் இதுபோன்ற மோசடி சம்பங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது மிக கவனமாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

More News

என்ன ஒரு அழகான குடும்பம்.. மகனின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயன் குடும்பத்தின் க்யூட் புகைப்படங்கள்..!

 நடிகர் சிவகார்த்திகேயன் மகன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது குடும்பத்தின் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்

ஆச்சரியம் மற்றும் மாயமந்திரம்: 'லால் சலாம்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த ஐஸ்வர்யா ரஜினி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின்

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில், “கிடா”  திரைப்படம்!!

சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்க்கும் கிடா திரைப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது !!

கலவரத்திற்கு மத்தியில் பாரிஸில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை… உருக்கமான பதிவு

சரவணன் அருள் நடித்த ‘தி லெஜெண்ட்‘ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்துவரும் நடிகை ஊர்வசி ரவுடாலா

விஜய் மக்கள் இயக்கத்தின் இரவு நேர பாடசாலை தொடங்குவது எப்போது? புதிய தகவல்..!

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பாடசாலை தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது