கண் புற்றுநோய்க்கு புது சிகிச்சை… இந்திய விஞ்ஞானிகளின் அசத்தல் சாதனை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் பாபா அணுசக்தி மையம் கடந்த சில வருடங்களாக மக்களுக்குப் பயன்படும் பல புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தற்போது கண் புற்றுநோயை நிரந்தரமாக தீர்க்கும் புது சிகிச்சை முறையை பாபா அணுசக்தி மையம் கண்டுபிடித்து உள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்கு இந்தியப் பிரதமர் உட்பட பல மத்திய அமைச்சர்கள் மற்றும் பொது மக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மும்பையில் அமைந்துள்ள பாபா அணுசக்தி மையத்தின் சில விஞ்ஞானிகள் ருத்தினீயம் 106 திசு மூலம் கண் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சையை உருவாக்கி உள்ளனர். மேலும் இத்திசுவை கையாள்வது மருத்துவர்களுக்கு மிகவும் எளிமையானதாக இருக்கும் என்றும் இந்த வகையிலான சிகிச்சை முறை உலகத்தரம் வாய்ந்தது என்றும் மருத்துவ உலகம் பாராட்டு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அந்த விஞ்ஞானிகள் கண் புற்றுநோய் மருத்துவத் துறையில் மிகவும் சிக்கலான பிரச்சனையாக இருந்து வருகிறது. அதற்குத் தற்போது உள்நாட்டிலேயே ஒரு நிரந்தர தீர்வு காணப்பட்டு இருக்கிறது. மேலும் எளிமையான வழிமுறைகளில் இச்சிகிச்சை இருப்பதால் பல எளிய மக்களுக்கு புது சிகிச்சை முறை உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout