விஜய்யை ஆதரித்த பிரபல நடிகரின் வீட்டை இடித்த மாநகராட்சி அதிகாரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியானபோது பாஜக தலைவர்கள் அந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி குறித்த வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பாலிவுட் நடிகரும் பாஜக எம்பியுமான சத்ருஹன்சின்ஹா, விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
'மெர்சல்' படத்தில் எழுப்பப்பட்ட நியாயமான கேள்விகளான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற கருத்துக்களை பாஜகவினர் ஏன் எதிர்க்க வேண்டும்? மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இதுபோன்ற கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அந்த கருத்தை கூறிய நடிகரை திட்டுவது சிறிதும் பொருத்தம் இல்லாத செயல் என்று சத்ருஹன் சின்ஹா தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை சத்ருஹன்சின்ஹா அவ்வப்போது விமர்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மும்பை ஜூகு பகுதியில் வசித்து வரும் சத்ருஹன்சின்ஹா, தனது வீட்டின் மொட்டை மாடியில் மும்பை மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் ஒரு கழிப்பறை கட்டியிருந்ததாகவும், மேலும் வீட்டின் சில பகுதிகளில் ஒருசில மாற்றங்கள் செய்திருந்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் இன்று காலை அவரது வீட்டில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout