ஜப்பான் மாடலில் நவீன வசதி… அசத்தும் ரயில்வே நிர்வாகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பயணிகள் ஓய்வெடுக்க கேப்ஸ்யூல் ஓட்டல் எனப்படும் சிறிய பாட் அறையை மும்பை ரயில்வே நிர்வாகம் வடிவமைத்துள்ளது. ஜப்பான் மாடலில் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த அறையைப் பார்த்த பயணிகள் பலரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மணிக்கணக்காக ரயில் நிலையங்களில் தங்கியிருப்பதைப் பார்த்திருப்போம். அப்படி ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் அமருவதற்கோ அல்லது நீட்டிப்படுத்து தூங்குவதற்கோ எந்த வசதியும் இருக்காது. ரயில்வே கட்டிடத்தில் சில அறைகள் இதற்காக ஒதுக்கப்பட்டு இருந்தாலும் குறைந்த அளவிலான அறைகள் எல்லா பயணிகளுக்கும் போதுமானதாக இருக்காது.
இந்நிலையில் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பாட் அறைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஒருவர் மட்டுமே தங்கக்கூடிய இந்த அறைகளில் வைஃபை, ஏசி, ஏர்பியூரிஃபையர், டிவி செட், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், லாக்கர், ஸ்டடி லைட் போன்ற பிற நவீன வசதிகள் பொருத்தப்பட்டு இருக்கினற்ன.
ஜப்பான் நாட்டில் பாட் ரூம் எனப்படும் இதுபோன்ற சிறிய அறைகள் பெரும்பாலான பொது இடங்களில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அந்த அறைகளில் மக்கள் சிறிது ஓய்வெடுத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது இதே பாணியில் மும்பை ரயில்வே நிர்வாகமும் 400 பாட் ரூம்களை வடிவமைத்து இருக்கிறது.
இந்த அறைகளுக்கு 12 – 24 மணிநேரத்திற்கு ரூ.999 முதல் ரூ.1,999 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு தனி நபர் 12 மணி நேரத்திற்கு பாட் ரூமை பயன்படுத்த ரூ.1,249 தொகையும் அதேபோல 24 மணி நேரத்திறகு ரூ. 2,499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இடத்தை அடைத்துக் கொள்ளாதவாறு அனைத்து வசதிகளுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் இதுபோன்ற பாட் ரூம்கள் எதிர்காலத்தில் அனைத்து ரயில்வே நிலையங்களிலும் எற்படுத்த வேண்டும் என்பதே தற்போது பலரின் கோரிக்கையாக இருக்கிறது.
Sneak Peek!
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) November 17, 2021
Welcome to the new-age Pod retiring rooms by @RailMinIndia at Mumbai Central. pic.twitter.com/NR7OCsxYeg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments