பேத்தியின் படிப்புக்காக வீட்டை விற்றுவிட்டு ஆட்டோவிலேயே வாழும் முதியவர்… பின்னர் நடந்த டிவிஸ்ட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மும்பையில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வரும் 74 வயது முதியவர் நாராயணா. இவருடைய பேத்தியின் பி.எட் படிப்புக்காக சொந்த வீட்டை விற்றுவிட்டு குடும்ப உறுப்பினர்கள் 8 பேரை மற்ற உறவினர்களின் வீட்டில் தங்க வைத்து உள்ளார். மேலும் குடும்பச் செலவுகளுக்காக காலை 6 மணி முதல் நள்ளிரவு முடிய ஆட்டோ ஓட்டும் இவர் ஆட்டோவிலேயே தங்கி, தூங்கி வாழ்க்கை நடத்தி வருகிறார்.
நாராயணாவின் 2 மகன்களும் இறந்து விட்ட நிலையில் அவர்களின் மனைவி மற்றும் பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். குடும்பச் செலவுகளுக்காக பல வருடங்களாக இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய பேத்தி 12 ஆம் வகுப்பில் 80% மதிப்பெண் பெற்று நாராயாணாவை மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க வைத்தார். அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பை முடித்த பேத்தியின் பி.எட் படிப்புக்காக சொந்த வீட்டையும் விற்றுள்ளார்.
மேலும் என்னுடைய பேத்தி ஆசிரியராகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அவர் ஆசிரியராக உயர்ந்து விட்டால் எல்லோரையும் இலவசமாக ஆட்டோவில் அழைத்துச் செல்வேன் எனத் தனது சந்தோஷத்தை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து வியந்து போன சிலர், நாராயணா பற்றி தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
பின்னர் நாராயணா பற்றிய பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இதுவரை 24 லட்சம் நன்கொடை கிடைத்து இருக்கிறது. இதனால் குளிர்ந்து போன நாராயணா ஒரு சொந்த வீட்டை வாங்கிக் கொள்வதாகவும் பேத்தியின் படிப்புச் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். பேத்தியின் படிப்புக்காக போராடும் முதியவரின் உழைப்பு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout