இலவச வைஃபையுடன் மல்டிபிளக்ஸ் தியேட்டர்: மதுரை மக்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசு
Send us your feedback to audioarticles@vaarta.com
மதுரையில் மூன்று திரையரங்குகளோடு பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்” நிறுவனத்தால் திறக்கப்பட்டது.
பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.G.N.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு தற்போது கோபுரம் சினிமாஸின் உரிமையாளராக உள்ளார். இந்த நிலையில் தீபாவளி திருநாளில் மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை நேற்று திறந்து வைத்தார். தீபாவளி தினத்தில் வெளியான புதிய படங்கள் இந்த “கோபுரம் சினிமாஸ்” திரையரங்குகளில் திரையிட்டது.
மேலும் “கோபுரம் சினிமாஸ்” நிறுவனத்தின் உரிமையாளரான செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீண்ட வரலாறு பொருந்திய ராஜ் திரையரங்கத்தையும் ஆறு திரைகள் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டராக மாற்ற முடிவெடுத்துள்ளார். வரும் காலங்களில் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தரமான சிறந்த படங்களையும் தயாரிக்க உள்ளார் என்பதும், இதற்காக பல முன்னனி கதாநாயகர்களிடம் கதை விவாதம் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து “கோபுரம் சினிமாஸ்” நிர்வாக உரிமையாளர் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில், ‘மதுரை மக்களுக்கு நல்ல படம் பார்க்கும் அனுபவத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதும், எங்கள் மல்டிபிளக்ஸ்ற்குள் வருபவர்களுக்கு நல்ல பாதுகாப்பையும், தரமான உணவையும் கொடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் தூய்மையான சூழ்நிலையையும் உருவாக்கி தருவதே எங்களுடைய மகத்தான நோக்கமாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.
மதுரையில் நேற்று திறக்கப்பட்டுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் முதல்முறையாக மதுரையில் நவீன ‘டால்பி’ தொழில் நுட்பத்துடன் Laser Projector, 4 Way Speaker, 3D Projection மற்றும் அகன்ற திரை வசதி கொண்ட 3 திரைகளுடன் பிரம்மாண்ட கோபுரமாய் “கோபுரம் சினிமாஸ்” உருவெடுத்துள்ளது.
அன்னிய தேசங்களின் தொழில் நுட்பங்களை மொத்தமாக உள்ளடக்கி புத்தம்புது பொலிவுடன் காட்சியளிக்கும் Interiors, மின்விளக்குகள் மற்றும் மிகப்பிரம்மாண்டமாக கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் Video Wallஐ மக்களுக்காக படைத்துள்ளது.
மக்களின் பாதுகாப்பிற்காக நவீன கேமிராக்கள் மற்றும் பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கோபுரம் சினிமாஸ் நியமித்துள்ளது. மேலும் மின் தடங்கல் இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மக்களின் வசதியை கருதி பிரம்மாண்ட பரப்பளவுள்ள கார் பார்க்கிங் மற்றும் பைக் பார்க்கிங்கை உருவாக்கியுள்ளது.
மேலும் மிக முக்கிய அம்சமாக மதுரையில் எங்கும் இல்லாத அளவிற்கு Customer Care வசதி மற்றும் இலவச WiFi வசதியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments