மல்டிபிளக்ஸ் முதலாளிகளின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தையில் சிக்கல்?
- IndiaGlitz, [Wednesday,October 11 2017]
தமிழக அரசு திரைத்துறையினர்களுக்கு விதித்த 10% கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அரசு கூறும் பதில் தியேட்டர் கட்டணம் 25% உயர்த்தப்பட்டதால் திரைத்துறையினர்களுக்கு நஷ்டம் வர வாய்ப்பில்லை என்பதுதான்
இந்த நிலையில் அரசிடம் தயாரிப்பாளர் சங்கம் தியேட்டர் கட்டண உயர்வு தேவையில்லை என்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏசி தியேட்டர்களுக்கு பழைய கட்டணமான 120 ரூபாய் என்றும் ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு பழைய கட்டணமான 80 ரூபாய் மட்டும் போதும் என்றும் அதற்கு பதிலாக 10% வரியை ரத்து செய்யும்படி என கேட்டுள்ளதாகவும், அதற்கு அரசும் இசைந்து வந்த வேளையில் மல்டிபிளஸ்க் திரையரங்குகளுக்கு ஏற்றிய தொகையை குறைக்கமுடியாது என மல்டிபிளக்ஸ் முதலாளியின் பிடிவாதத்தால் அனைத்தும் கெட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
பெரும்பாலான மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் இந்தி மற்றும் ஆங்கில படங்கள் திரையிடப்படுவதால் புதிய கட்டணமான ரூ160 என்ற கட்டணத்தை வசூலிக்கவே, மொத்த தமிழ் சினிமாவையும் அழிவை நோக்கி கொண்டு மல்டிப்ளக்ஸ் முதலாளிகள் கொண்டு செல்வதாக தமிழ் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மல்டிபிளக்ஸ் முதலாளிகள் இந்த திட்டத்திற்கு ஒத்து வந்திருந்தால் இந்த பிரச்சனை இந்நேரம் முடிவுக்கு வந்திருக்கும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.